TNPSC Thervupettagam

ஹென்லி கடவுச் சீட்டுக் குறியீடு 2023

July 21 , 2023 364 days 235 0
  • இந்தக் குறியீடானது, 199 வெவ்வேறு கடவுச் சீட்டுகள் மற்றும் 227 வெவ்வேறு பயண இடங்களை உள்ளடக்கியது.
  • 2023 ஆம் ஆண்டு ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியா ஏழு இடங்கள் முன்னேறி 80வது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • இந்தியர்கள் முற்றிலும் நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் அல்லது வருகையின் போது  நுழைவு இசைவுச் சீட்டு பெறும் வசதி மூலம் 57 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.
  • 2014 ஆம் ஆண்டில், 52 நாடுகள் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இன்றி பயணம் மேற்கொள்ளும் அனுமதியை வழங்கியதோடு, இந்தியா இப்பட்டியலில் 76வது இடத்தைப் பெற்றது, ஆனாலும் அதன் செயல்திறன் சீரான முறையில் இல்லை.
  • இது 2015 ஆம் ஆண்டில் 88வது இடத்திலும் (51 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இன்றி பயணம் மேற்கொள்ள அனுமதி), 2016 ஆம் ஆண்டில் 85வது இடத்திலும், 2017 ஆம் ஆண்டில் 87வது இடத்திலும், 2018 ஆம் ஆண்டில் 81வது இடத்திலும், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 82வது இடத்திலும் மற்றும் 2021 ஆம் ஆண்டில் 81வது இடத்திலும் இந்தியா இடம் பெற்றது.
  • ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் ஐந்தாண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஜப்பான் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
  • இதில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
  • ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்