TNPSC Thervupettagam

ஹென்லே கடவுச்சீட்டுக் குறியீடு 2025

January 13 , 2025 9 days 136 0
  • உலகளாவிய கடவுச்சீட்டு குறியீட்டில் இந்தியாவின் தரவரிசையானது ஐந்து புள்ளிகள் குறைந்து இந்த ஆண்டு 85 ஆக உள்ளது.
  • ஒரு இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர் 57 இடங்களுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் பயணிக்கலாம்.
  • இந்தக் குறியீட்டில் சிங்கப்பூர் நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் 199 வெவ்வேறு கடவுச் சீட்டுகள் மற்றும் 227 வெவ்வேறு பயண இடங்கள் அடங்கும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தக் குறியீட்டின் படி, பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தின் தரவரிசை முறையே 103வது (2024 ஆம் ஆண்டில் 101வது) மற்றும் 100வது (2024 ஆம் ஆண்டில் 97வது) இடத்தில் இருந்தது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான ஹென்லே கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை உலகளவில் 80வது இடத்தில் இருந்தது.
  • இந்த ஆண்டு ஜப்பானின் தரவரிசை 2வது இடத்தில் உள்ளதோடு இது 2018-2023 ஆம் ஆண்டு வரை அது முதலிடத்தில் இருந்தது.
  • 2024 ஆம் ஆண்டில், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளும் இதில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்