TNPSC Thervupettagam
December 9 , 2019 1815 days 594 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது ஒரு சிறுகோளை ஆராய விண்கலத்தைச் செலுத்தும் திட்டத்தின் ஐரோப்பிய அங்கமான ஹெராவின் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களின் Didymos ஜோடியான ஈரிணைய சிறுகோள் அமைப்பினை ஆராய்ச்சி செய்வதற்கு ஹெரா திட்டத்தின் விண்கலமானது 2024 ஆம் ஆண்டில் ஏவப்பட உள்ளது.

ஹெரா திட்டம் & DART பற்றி

  • ஒரு  ஈரிணைய சிறுகோளை ஆராய இருக்கும் முதல் விண்கலம் இதுவாகும்.
  • இந்தத் திட்டமானது சிறிய பொருள்களாலான பெரிய கட்டமைப்பைக் கொண்ட, ஒரு சிறுகோளைச் சுற்றி வரக் கூடிய “65803 Didymos” என்ற ஈரிணைய ஜோடியை ஆராய்வதற்காக 2023 ஆம் ஆண்டில் ஏவப்பட உள்ளது. இதன் பொருத்தமான புனைப்பெயர் Didymoon என்பதாகும்.
  • இருப்பினும், ஹெரா திட்டத்தின் விண்கலமானது  Didymosஐ முதலில் சென்றடையாது.
  • நாசா அமைப்பானது 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இரட்டை சிறுகோள் திசைதிருப்புதல் சோதனையை (Double Asteroid Redirection Test - DART) தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டமானது இதன் கிரகப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக Didymoonஐ ஆராய உள்ளது.
  • DART என்பது அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியில் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தடுப்பதற்கான தொழில்நுட்பங்களில் ஒன்றான இயக்கவியல் தாக்கி என்ற கிரகப் பாதுகாப்பு-உந்துதல் சோதனையை நிகழ்த்தும் ஒரு திட்டமாகும்.
  • ஒரு சிறிய சிறுகோள் மீதான இயக்க ஆற்றல் விளைவுகளைப் பரிசோதித்து அறிவதே DARTன் முதன்மையான  நோக்கமாகும்.
  • சர்வதேச ‘சிறுகோள் தாக்க விலகல் மதிப்பீடு’ பரிசோதனையின் ஒரு பகுதியாக DART மற்றும் ஹெரா திட்டங்கள் ஒரே மாதிரியாகக் கருதப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்