TNPSC Thervupettagam

ஹெலினா (துருவஸ்திரம்)

August 12 , 2023 472 days 238 0
  • ஹெலினா என்பது மேம்படுத்தப் பட்ட இலகுரக ஹெலிகாப்டரிலிருந்து (ALH) ஏவப்பட்ட வானிலிருந்து நிலத்தில் உள்ள ஒரு இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணை அமைப்பு ஆகும்.
  • மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் என்பது இரண்டு இரட்டை ஏவுகருவிகள் பொருத்தப் பட்டுள்ள நிலையில் அவற்றுள் ஒவ்வொன்றிலும் எட்டு ஏவுகணைகள் உள்ளன.
  • இது 7 கி.மீ. வரையிலான இலக்கினைத் தாக்கும் திறன் கொண்டது மற்றும் 1.946 மீ நீளம் மற்றும் 0.150 மீ விட்டம் கொண்டது.
  • இது ஏவுவதற்கு முன்னதாக இலக்கினைத் துல்லியமாக நிர்ணயித்து ஏவக் கூடிய (LOBL) செயல்முறையில் இயங்கக் கூடிய உயர் தெளிவுத் திறன் கொண்ட வரைபடமாக்க அகச் சிவப்பு ஆய்வுக் கருவியைக் (IIR) கொண்டுள்ளது.
  • இது மிகவும் மோசமான வானிலை சூழ்நிலைகளிலும் தன்னிச்சையாக இலக்கினை நன்கு கண்டறிந்து, கண்காணிக்கும் திறன் கொண்டது.
  • 2022 ஆம் ஆண்டில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது பயனர் சரிபார்ப்புச் சோதனைகளின் ஒரு பகுதியாக அதி-உயரப் பகுதிகளில் இந்த ஆயுத அமைப்பினை வெற்றிகரமாகச் சோதனை செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்