TNPSC Thervupettagam

ஹெலோபெல்டிஸ் தீவோரா

April 25 , 2023 452 days 237 0
  • தேயிலை கொசுப் பூச்சி (Helopeltis Theivora) அல்லது நாவாய்ப் பூச்சி தென்னிந்தியாவில் உள்ள தாழ்மட்ட மற்றும் உயர்மட்ட நிலங்களில் அமைந்தத் தோட்டப் பயிர்நிலங்களில் வேகமாக பரவி தேயிலை உற்பத்தியைப் பாதித்து வருகிறது.
  • இது பெரும்பாலான தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் தேயிலைச் சாற்றினை உறிஞ்சி அவற்றை அழிக்கும் ஒரு முக்கியப் பூச்சி வகையாகும்.
  • தேயிலை கொசுப் பூச்சியின் இளம் பூச்சிகள் /லார்வாக்கள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் மென்மையான இலைகள், மொட்டுகள் மற்றும் இளம் தளிர்கள் ஆகியவற்றிலிருந்துச் சாற்றை உறிஞ்சுவதால், அதிகப் பயிர் இழப்பு ஏற்படுகிறது.
  • 6.37 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புடன், உலகிலேயே அதிகளவிலான தேயிலை பயிரிடும் நிலப்பரவலைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
  • வட இந்தியாவில் தேயிலைப் பயிரிடல் பரப்பளவு என்பது 5.36 லட்சம் ஹெக்டேர் என்ற நிலையில் தென் இந்தியாவில் இது 1.01 லட்சம் ஹெக்டேர் பரப்பளவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்