ஹேரத் அல்லது 'ஹர (சிவன்) இரவு' ஆனது பொதுவாக மகா சிவராத்திரி என்று அழைக்கப் படுகிறது.
இது ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் உள்ள காஷ்மீரி பண்டிட்களால் கொண்டாடப் படும் ஒரு முக்கியத் திருவிழாவாகும்.
இந்தத் திருவிழா சிவன் மற்றும் உமா (பார்வதி) தேவியின் திருமண நாள் நினைவினைக் குறிக்கிறது.
2022 ஆம் ஆண்டின் ஹேரத் திருவிழா பிப்ரவரி 28 அன்று கொண்டாடப்பட்டது.
ஹேரத் திருவிழா "திரயோதசி" அல்லது பால்குணா மாதத்தின் (இந்து நாட்காட்டி) அமாவாசை பகுதியின் 13வது நாளில், பிப்ரவரி மற்றும் மார்ச் இடையே கொண்டாடப் படுகிறது.
தேசத்தின் பிற பகுதிகளில் சதுர்த்தசி அல்லது பால்குணாவின் 14வது நாளன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.