TNPSC Thervupettagam
January 26 , 2024 304 days 316 0
  • இந்திய நோய்த் தடுப்பாற்றல் ஆராய்ச்சி லிமிடெட் (IIL) நிறுவனமானது, ஹேவிஷூர் எனும் இந்தியாவின் ‘முதல்’ ஹெபடைடிஸ் A (கல்லீரல் அழற்சி) தடுப்பூசியை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • ஹெபடைடிஸ் A என்பது மிகவும் தொற்றக்கூடிய கல்லீரல் வைரஸ் தொற்று ஆகும்.
  • இது முதன்மையாக அசுத்தமான சூழலுடன் தொடர்பு கொண்ட நபர் உணவு உட்கொள்ளும் போது வாய்வழியாக பரவுவதால், இது ஒரு குறிப்பிடத்தக்கப் பொதுச் சுகாதாரச் சவாலை முன்வைக்கிறது.
  • இது அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதன் மூலம் பரவுகிறது.
  • இந்தத் தடுப்பூசி கல்லீரல் அழற்சி நோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருப்பதால், வழக்கமான நோய்த்தடுப்பு மருந்து வழங்கீட்டு திட்டங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட பரிந்துரைக்கப்படுகிறது.
  • IIL என்பது தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (NDDB) கீழ் இயங்கும் அதன் துணை நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்