முதலாம் உலகப் போரின் போது, ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான சினாய் மற்றும் பாலஸ்தீனப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஹைஃபா போர் நடத்தப்பட்டது.
முக்கியமாக போரில் ஈடுபட்ட மைசூர், ஹைதராபாத் மற்றும் ஜோத்பூர் ஆகிய மூன்று இந்தியக் குதிரைப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இந்திய ராணுவம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 23 ஆம் தேதியினை 'ஹைஃபா தினமாக' அனுசரிக்கிறது.
15வது (அரசுக் காவல்பணி) குதிரைப்படைப் வீரர்கள் அடங்கிய படைப்பிரிவானது, முக்கியமான துறைமுகங்களைக் கைப்பற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் இதில் பெரும்பாலும் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
தல்பத் சிங் ஷெகாவத் "ஹைஃபாவின் நாயகன்" என்ற அழியாதப் புகழைப் பெற்றார்.
இந்தப் போர் காரணமாகப் பின்வரும் நிகழ்வுகள் நடைபெற்றன:
ஒட்டோமான் பேரரசின் பிரிவினை,
1923 ஆம் ஆண்டில் துருக்கியக் குடியரசின் உருவாக்கத்திற்கும், 1932 ஆம் ஆண்டில் ஈராக் இராட்சியத்தின் உருவாக்கத்திற்கும் வழி வகுத்தது,
1943 ஆம் ஆண்டில் லெபனான் குடியரசு உருவாக்கம்,
1946 ஆம் ஆண்டில் ஜோர்டானின் ஹாஷிமைட் இராட்சியம் மற்றும் சிரிய அரபு குடியரசு உருவாக்கம் மற்றும்
1948 ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாடு ஆகியவற்றின் உருவாக்கம்.