ஒரு தென் கொரிய நிறுவனமான ஹைடோல், மறதி நோய் உள்ள முதியவர்களிடையே நிலவும் தனிமையைப் போக்குவதற்காக செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தும் வகையில் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது.
இது ஹைடோல் என்ற சமூகத் திறன்கள் கொண்ட எந்திர மனிதனை அறிமுகம் செய்து உள்ளது.
அவற்றின் மேம்பட்ட மொழிச் செயலாக்கம் மற்றும் உணர்ச்சிகளை அடையாளம் காணும் திறன், பேசுதல் மற்றும் இசையை வாசிக்கும் திறன் ஆகியவை பல்வேறு முதியோர்களுடனான சில வகையான ஊடாடல்களை மேற்கொள்கிறது.