TNPSC Thervupettagam

ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் இரயில்

September 19 , 2018 2259 days 647 0
  • உலகின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் பயணிகள் இரயிலை ஜெர்மனி வெளியிட்டுள்ளது. ‘ஐலிண்ட்’ (iLint) என்றழைக்கப்படும் இந்த இரயிலானது பூஜ்ய உமிழ்வுடையதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவையாக உள்ளது.
  • இந்த இரயில் தொழில் நுட்பமானது மின்மயமாக்கப்பட்ட இரயில் பாதைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், சத்தமில்லாததாகவும் டீசலுக்கு மாற்றாகவும் உள்ளது.
  • இந்த ஹைட்ரஜன் இரயிலானது பிரான்ஸின் TGV தயாரிப்பாளரான அல்ஸ்டாம் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
  • ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை இணைப்பதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் எரிபொருள் செல்கள் இந்த ஹைட்ரஜன் இரயில்களில் பொருத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்