TNPSC Thervupettagam

ஹைட்ரஜனில் இயங்கும் முதலாவது கனரக சரக்குந்து வாகனம்

February 20 , 2023 646 days 434 0
  • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் உள் எரிதிறன் இயந்திரம் (H2-ICE) மூலம் இயங்கும் கனரகச் சரக்குந்து வாகனமானது சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • அசோக் லேலாண்டு நிறுவனத்தின் புதிய H2-ICE கனரகச் சரக்குந்து வாகன ரகங்கள் ஆனது ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப் படுவதோடு, இது வழக்கமான டீசல் எரி பொருளில் இயங்கும் எரிப்பு இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • இது அசோக் லேலாண்டு நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டது.
  • ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் தூய்மையான எரிசக்தி மூலங்களுக்கு விரைவாக மாறுவதற்கு இது உதவும்.
  • H2-ICE இயந்திரமானது, வளிமண்டல ஹைட்ரஜனைப் பயன்படுத்தினால் மட்டுமே நைட்ரஜன் ஆக்சைடுகளை உற்பத்தி செய்கிறது.
  • இந்திய அரசானது, நைட்ரஜன் ஆக்சைடுகளை தனது மாசுபடுத்திகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
  • H2-ICE இயந்திரத்தில் சல்பர் ஆக்சைடுகள், கார்பன் மோனாக்சைடு, நுண்துகள்கள் அல்லது ஹைட்ரோ கார்பன்கள் ஆகியவற்றின் உமிழ்வுகள் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்