ஹைட்ரஜனில் இயங்கும் முதலாவது கனரக சரக்குந்து வாகனம்
February 20 , 2023 646 days 433 0
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் உள் எரிதிறன் இயந்திரம் (H2-ICE) மூலம் இயங்கும் கனரகச் சரக்குந்து வாகனமானது சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது.
அசோக் லேலாண்டு நிறுவனத்தின் புதிய H2-ICE கனரகச் சரக்குந்து வாகன ரகங்கள் ஆனது ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப் படுவதோடு, இது வழக்கமான டீசல் எரி பொருளில் இயங்கும் எரிப்பு இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இது அசோக் லேலாண்டு நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டது.
ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் தூய்மையான எரிசக்தி மூலங்களுக்கு விரைவாக மாறுவதற்கு இது உதவும்.
H2-ICE இயந்திரமானது, வளிமண்டல ஹைட்ரஜனைப் பயன்படுத்தினால் மட்டுமே நைட்ரஜன் ஆக்சைடுகளை உற்பத்தி செய்கிறது.
இந்திய அரசானது, நைட்ரஜன் ஆக்சைடுகளை தனது மாசுபடுத்திகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
H2-ICE இயந்திரத்தில் சல்பர் ஆக்சைடுகள், கார்பன் மோனாக்சைடு, நுண்துகள்கள் அல்லது ஹைட்ரோ கார்பன்கள் ஆகியவற்றின் உமிழ்வுகள் இல்லை.