ஒரு மில்லியனில் ஒரு பகுதி (1ppm) என்ற மிகக் குறைந்த செறிவில் இருக்கும் போது கூட ஹைட்ரஜன் வாயுவைக் கண்டறியும் ஒரு உணர்வியானது ஐதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ஜோத்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உணர்வியானது 1ppm செறிவில் உள்ள ஹைட்ரஜனைக் கண்டறிய 30 சதவீத உணர்திறனுடனும் வாயுவானது 100ppm அளவு செறிவில் இருக்கும் போது அதிகபட்சமாக 74% உணர்திறனுடனும் உள்ளது.
இது ஹைட்ரஜனைக் கண்டறிய 25 வினாடி காலம் எடுத்துக் கொள்கிறது.
ஹைட்ரஜன் வாயுவானது ஒரு மாசு இல்லாத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும். மேலும் இது எதிர்கால எரிபொருள் தேர்வாகவும் கருதப்படுகிறது.
இருப்பினும் ஹைட்ரஜன் மிகவும் வெடிக்கக் கூடியதும் எளிதில் தீப்பற்றி எரியக் கூடியதுமாகும்.
இது மிகவும் சிறிய மூலக்கூறுகளாக இருப்பதால் உடனடியாக காற்றோடு கலக்கக் கூடியது. இதன் நிறமற்ற மற்றும் சுவையற்ற தன்மையினால் ஹைட்ரஜன் வாயுக் கசிவைக் கண்டறிவது மிகவும் கடினமாகும்.
எனவே மிகக் குறைந்த செறிவில் இருக்கும் போது கூட அதனைக் கண்டறியக் கூடிய உணர்விகள் அவசியமாகின்றன.