இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் இந்திய எண்ணெய்க் கழக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை உயிரிவாயு உருவாக்கம் (biomass gasification) சார்ந்த ஹைட்ரஜன் உற்பத்தித் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இது எரிபொருள் மின்கலனின் (Fuel Cell) தரத்தில் ஹைட்ரஜனை மலிவு விலையில் உற்பத்தி செய்யவுள்ளது.
ஃபரிதாபாத்தில் உள்ள இந்திய எண்ணெய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்தத் தொழில்நுட்பம் விளக்கிக் காட்டப்பட உள்ளது.