TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் எரிபொருள் கலன் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்து

August 24 , 2022 828 days 611 0
  • புனேவில் உள்ள KPIT-CSIR நிறுவனத்தினால் ஹைட்ரஜன் எரிபொருள் கலன் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்து உருவாக்கப்பட்டது.
  • ஹைட்ரஜன் எரிபொருள் கலன் ஆனது ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்குகிறது.
  • மேலும் இந்தச் செயல்பாட்டின் போது வெப்பம் மற்றும் தண்ணீரை மட்டுமே அது உற்பத்தி செய்கிறது.
  • இந்தப் பேருந்தில் உள்ள ஹைட்ரஜன் எரிபொருள் கலன்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களை இணைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
  • இந்த இரண்டு வாயுக்களும் மின்சாரம், நீர் மற்றும் சிறிய அளவு வெப்பத்தை உருவாக்குவதற்காக வழக்கமான மின்கல அடுக்குகள் போன்ற மின் வேதியியல் கலத்தின் உள்ளே வினை புரிகின்றன.
  • இந்த மின்சாரம் அந்த வாகனத்தை முன்னோக்கிச் செலுத்துவதற்கு உதவுவதற்காக வேண்டி மின்சார இயக்கிகளால் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்