TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன்

April 30 , 2020 1673 days 770 0
  • சமீபத்தில் தேசிய அனல் மின் கழகமானது 10 ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலப் பேருந்துகள் மற்றும் அதே போன்ற 10 மின்சார மகிழுந்துகள் ஆகியவற்றை வாங்குவதற்கான விருப்பக் கடிதங்களை வரவேற்றுள்ளது.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த வாகனங்கள் தில்லி மற்றும் லேஹ் நகரில் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
  • இதே வகையைச் சேர்ந்த நாட்டின் முதலாவது திட்டம் இதுவாகும்.
  • இது நாட்டில் கரிம நீக்கத்தை மேற்கொள்ளும் போக்குவரத்து முறையாக இருக்கின்றது.
  • ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலமானது செறிவு மிக்க ஹைட்ரஜன் எரிபொருளை மின்சாரமாக மாற்ற வேதியியல் முறையைப் பயன்படுத்துகின்றது.
  • இந்த எரிபொருள் மின்கலனின் முக்கியமான நன்மை, இவை அடிக்கடி மின்னேற்றப்பட வேண்டியதில்லை.
  • இது எரிபொருள் இருக்கும் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது.
  • அதிகத் திறன், குறைந்த – சுழிய உமிழ்வுகள், எரிபொருள் நெகிழ்வுத் தன்மை, அமைதியான செயல்பாடு, நீடித்தத் தன்மை மற்றும் ஆற்றல் (எரிபொருள்) பாதுகாப்பு ஆகியவை ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலனின் மிக முக்கியமான பயன்களாகும்.
  • ஹைட்ரஜன் எரிபொருள் என்பது ஆக்ஸிஜனுடன் சேர்த்து எரிக்கப்படும் சுழிய உமிழ்வு கொண்ட எரிபொருளாகும்.
  • இது எரிபொருள் மின்கலன்கள் மற்றும் உள்ளக எரிப்பு எஞ்சின்களில் பயன்படுத்தப் படுகின்றது.
  • இது விண்வெளி இயந்திரத்தின் உந்து விசைக்கான எரிபொருளாகவும் பயன்படுத்தப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்