இந்தியாவில் அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்காக ஹைட்ராக்ஸியூரியா மருந்தின் குறைந்த வீரிய கொண்ட அல்லது குழந்தைகளுக்கான வாய்வழி மருந்து சூத்திரத்தின் "கூட்டு உருவாக்கம் மற்றும் வணிகமயமாக்கலுக்காக" தகுதியான நிறுவனங்களிடமிருந்து ஈடுபாட்டு விருப்பத்தினை (EoI) தெரிவிக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) அழைப்பு விடுத்துள்ளது.
தெற்காசியாவில் இந்தியாவில் தான் அரிவாள் உயிரணு சோகை நோய் பாதிப்பு அதிகம் பரவியுள்ளது என்பதோடு நாட்டில் 20 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் அரிவாள் செல் உயிரணு சோகையினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருந்து நிறுவனங்களானது ஹைட்ராக்ஸியூரியா 500 mg மாத்திரைகள் அல்லது 200 mg மாத்திரைகளைச் சந்தைப்படுத்துகின்றன.
இந்த நோய் பாதிப்புள்ள குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் இவற்றின் பயனுள்ள பயன்பாட்டில் இந்த வீரிய அளவு மிகப்பெரிய சவாலாக உள்ளது.