இந்த மருந்து மீதான ஏற்றுமதி தடையை நீக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப், கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இதை ஒரு "கேம் சேஞ்சர்" அல்லது மிக முக்கிய திருப்புமுனை என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகில் ஹைட்ராக்ஸி குளோரோகுயினின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களுள் இந்தியாவும் ஒன்றாகும்.
பழமையான மற்றும் நன்கு அறியப்பட்ட மலேரியா எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றான குளோரோகுயினுடன் இது மிகவும் ஒத்திருக்கிறது.
தற்போது பல தசாப்தங்களாக அதிகம் நாடப்படும் ஒரு மலேரியா எதிர்ப்பு மருந்தான இந்த 'குளோரோகுயின் பாஸ்பேட்’ மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் ஒரே பொதுத்துறை நிறுவனமாக வங்காள வேதிம மற்றும் மருந்துகள் நிறுவனமானது (BCPL - Bengal Chemicals and Pharmaceuticals Limited) உருவெடுத்துள்ளது.
வங்காள வேதிம மற்றும் மருந்துகள் நிறுவனமானது 1901 ஆம் ஆண்டில் ஆச்சார்யா பிரபுல்லா சந்திர ரே அவர்களால் நிறுவப்பட்டது.
இதுவே இந்தியாவின் முதல் மருந்து உற்பத்தி நிறுவனமாகும்.
பிரபுல்லா சந்திர ரே "இந்திய வேதியியலின் தந்தை" என்று அழைக்கப் படுகிறார்.