TNPSC Thervupettagam

ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

April 13 , 2020 1690 days 641 0
  • இந்த மருந்து மீதான ஏற்றுமதி தடையை நீக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப், கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இதை ஒரு "கேம் சேஞ்சர்" அல்லது மிக முக்கிய திருப்புமுனை என்று குறிப்பிட்டுள்ளார்.
  • உலகில் ஹைட்ராக்ஸி குளோரோகுயினின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களுள் இந்தியாவும் ஒன்றாகும்.
  • பழமையான மற்றும் நன்கு அறியப்பட்ட மலேரியா எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றான குளோரோகுயினுடன் இது மிகவும் ஒத்திருக்கிறது.
  • தற்போது பல தசாப்தங்களாக அதிகம் நாடப்படும் ஒரு மலேரியா எதிர்ப்பு மருந்தான இந்த 'குளோரோகுயின் பாஸ்பேட்’ மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் ஒரே பொதுத்துறை நிறுவனமாக வங்காள வேதிம மற்றும் மருந்துகள் நிறுவனமானது  (BCPL - Bengal Chemicals and Pharmaceuticals Limited)  உருவெடுத்துள்ளது.
  • வங்காள வேதிம மற்றும் மருந்துகள் நிறுவனமானது 1901 ஆம் ஆண்டில் ஆச்சார்யா பிரபுல்லா சந்திர ரே அவர்களால் நிறுவப்பட்டது.
  • இதுவே இந்தியாவின் முதல் மருந்து உற்பத்தி நிறுவனமாகும்.
  • பிரபுல்லா சந்திர ரே "இந்திய வேதியியலின் தந்தை" என்று அழைக்கப் படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்