TNPSC Thervupettagam
January 18 , 2023 551 days 274 0
  • ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் முகரம் ஜா பகதூர் துருக்கியில் காலமானார்.
  • 1948 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்துடன் இணைந்த பிறகு ஹைதராபாத் நிஜாமின் ஆட்சி முறை ஆதிக்கம் அழிந்து  போனது.
  • ஏழாவது நிஜாம் மிர் உஸ்மான் அலி கான், இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட நாளான 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அம்மாநிலத்தின் அரசப் பிரமுகராக பணியாற்றினார்.
  • ஹைதராபாத் மாநிலத்தின் சில பகுதிகள் அண்டைப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டு ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
  • 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், உஸ்மான் அலி கான் முகரம் ஜாவை தனது வாரிசாக அங்கீகரிக்குமாறு கடிதம் மத்திய அரசுக்கு எழுதிய நிலையில் அந்த முன்னாள் மன்னரின் இந்த கோரிக்கையானது 1964 ஆம் ஆண்டில் மத்திய அரசினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • 1966 ஆம் ஆண்டில் உஸ்மான் அலி கான் காலமானதைத் தொடர்ந்து, ஜா ஹைதராபாத் நிஜாம் என்ற பட்டத்தை 1971 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை கொண்டிருந்தார்.
  • 1971 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் தனியுரிமைக் கருவூலம் மற்றும் அரசப் பட்டங்களை ரத்து செய்தது.
  • தற்போது, முகரம் ஜாவின் மறைவு 1724 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆசஃப் ஜாஹி வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்