ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையானது ஹைதி நாட்டிற்கான வெளிநாட்டுப் பாதுகாப்புத் திட்டத்தினை அங்கீகரித்துள்ளது.
இந்தக் கரீபியப் பகுதி நாடானது, அதன் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் பகுதியின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய வன்முறைக் கும்பல்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவி நாடியது.
ஹைத்தியின் பல கரீபிய அண்டை நாடுகளான ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பஹாமாஸ் மற்றும் ஜமைக்கா ஆகியவையும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவை வழங்கி உள்ளன.