கூகுளின் டீப் மைண்ட், டிக்டாக் ஆகியவற்றின் முன்னாள் உறுப்பினர்களால் நிறுவப்பட்ட ஹைபர் நிறுவனம் மற்றும் சில ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த ஆய்வகங்கள் ஆகியவை இணைந்து அவற்றின் தொடர்பு சார் பெயரிடப்பட்ட (eponymous), உரையினை ஒளிப்படக்காட்சியாக மாற்றும் புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவரோ அல்லது இல்லாதவரோ என அனைவரும் உயர்தர ஒளிப்படக் காட்சிகளை எளிதாக உருவாக்க இது வழிவகை செய்கிறது.
ஹைபர் மாதிரியானது, உரையினை ஒளிப்படக்காட்சியாக மாற்றும் நுட்பம், இயங்குபடம் நுட்பம் செலுத்தப்பட்ட நிலைபடங்கள், ஒளிப்படக்காட்சிகளை மீண்டும் வண்ணம் தீட்டுதலுக்கான கருவிகள் போன்ற கருவிகளை வழங்குகிறது.