TNPSC Thervupettagam

ஹைப்பர்லூப் திட்டம்

February 20 , 2018 2501 days 901 0
  • ரிச்சர்ட் பிரான்சன் தலைமையிலான விர்ஜின் குழுமம் மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு இடையே ஒரு ஹைப்பர்லூப் (மீயொலி வேக) போக்குவரத்து அமைப்பை கட்டமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் மூலமாக இரண்டு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் தற்போதைய மூன்று மணி நேரத்திலிருந்து வெறும் 25 நிமிடங்களாக குறையும்.
  • முன்மொழியப்பட்டுள்ள இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து அமைப்பானது மத்திய புனேவை மும்பை சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும்.
  • முழுவதும் மின் பயன்பாட்டுடைய அமைப்பான இது மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் திறனுடையது.

  • ஹைப்பர்லூப் தொழில்நுட்பமானது ஐந்தாம் வகை போக்குவரத்து அமைப்பாக அறியப்படுகின்றது.
  • எத்தகு உராய்வும் இன்றி பயணிக்கவல்ல இது ஓர் நீள் குழல் பயணவகை அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்