TNPSC Thervupettagam

ஹைப்பர்லூப் மூலமான சரக்குப் போக்குவரத்து

February 25 , 2023 512 days 253 0
  • கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, நிலக்கரி மற்றும் கனிமங்களைக் கொண்டு செல்வதற்காக வேண்டி ஆற்றல் செயல்திறன் மிக்க மீ-வளி அழுத்தத்தில் வைக்கப்பட்ட காற்று கொண்ட ஒரு குழாய் அமைப்பினை உருவாக்கி உள்ளது.
  • ஹைப்பர்லூப் மூலமான சரக்குப் போக்குவரத்துச் சேவையானது பொருள் இழப்பு, விநியோக நேரத்தில் உள்ள நிச்சயமற்றத் தன்மை மற்றும் காற்று மாசுபாடு போன்ற சவால்களை எதிர்கொள்ள உதவும்.
  • இந்த அமைப்பானது, நிலக்கரி அல்லது நீர்மங்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மீ-வளி அழுத்தக் காற்றினை அதன் ஆற்றலாகக் கொண்டு எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த எந்திரமானது, ஒரு மணி நேரத்திற்குச் சுமார் 120 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடியதோடு, முழுவதும் சரக்கு ஏற்றப்பட்ட ஒரு தொகுதியை நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்குத் தொடர்ந்து கொண்டு செல்லக் கூடியது.
  • இந்த அமைப்பானது துல்லியமான, நம்பகமான மற்றும் தொடர்ச்சியான வாகனம் / எந்திர இடங்காட்டு அமைப்பையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்