இந்திய அரசானது, சீனாவின் ஹோட்டன் மாகாணத்தில் ஹீ'ஆன் மற்றும் ஹெகாங் ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்காக சீனாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதிகளின் அதிகார வரம்பு ஆனது, இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமான லடாக் பகுதியினையும் உள்ளடக்குகிறது.
ஹோட்டன் மாகாணம் என்பது சீனாவின் தென்மேற்கு சின்ஜியாங்கில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும்.
முன்னதாக 2017 ஆம் ஆண்டு சீனாவானது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களுக்கான 'தரப்படுத்தப்பட்ட' பெயர்களின் ஆரம்பப் பட்டியலை வெளியிட்டது.
2021 ஆம் ஆண்டில், 15 இடங்களைக் கொண்ட இரண்டாவது பட்டியலை அந்த நாடானது வெளியிட்டது, என்ற நிலையில் 2023 ஆம் ஆண்டில் 11 கூடுதல் இடங்களின் பெயர்களைக் கொண்ட மற்றொரு பட்டியல் வெளியிடப் பட்டது.