TNPSC Thervupettagam

ஹோமரின் கிரேக்க மொழி காவியங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு

July 17 , 2023 498 days 281 0
  • ஹோமர் எழுதிய The Iliad மற்றும் The Odyssey ஆகிய இரண்டு கிரேக்கக் காவியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புப் பதிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
  • சர்வதேச செவ்வியல் படைப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிடச் செய்வதற்காக முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இவை வெளியிடப் பட்டுள்ளன.
  • சர்வதேசத் தமிழாய்வு நிறுவனமானது இந்தத் திட்டத்திற்கானப் பொறுப்பினை ஏற்று உள்ளது.
  • பேராசிரியர் மருதநாயகம் அவர்கள் The Iliad புத்தகத்தினை உரைநடை வடிவில் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
  • தலைமைச் செயலகத்தின் முன்னாள் அரசு ஊழியர் பொன் சின்னத்தம்பி முருகேசன் The Odyssey புத்தகத்தினை தமிழ் மொழியில் கவிதை வடிவில் மொழிபெயர்த்துள்ளார்.
  • முன்னதாக திரு. முருகேசன் ஃபிரிட்ஜோஃப் காப்ரா எழுதிய Tao of Physics, பாலோ கோயல்ஹோ எழுதிய The Alchemist, அலெக்ஸ் ஹேலி எழுதிய Roots மற்றும் The Travels of Marco Polo ஆகிய புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்