TNPSC Thervupettagam

ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸ்

August 18 , 2024 97 days 219 0
  • இந்தோனேசியாவில் மத்திய புளோரஸின் சோவா படுகையின் மாட்டா மெங்கே என்ற இடத்தில் 700,000 ஆண்டுகள் மிகப் பழமையான மூன்று ஹோமினின் புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இதனுடன், அறிவியல் ஆய்வாளர்கள் அவற்றின் தோற்றத்தை விவரிக்க என்று இரண்டு கோட்பாடுகளை முன் வைத்துள்ளனர்.
  • ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸ் முற்கால ஆசிய ஹோமோ எரெக்டஸ் இனத்தின் உயரம் குன்றிய வழித் தோன்றல்கள் என்று முதலாவது கோட்பாடு குறிப்பிடுகிறது.
  • அழிந்து போன மனித இனமான ஹோமோ எரெக்டஸ் 100,000 முதல் 1.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம்.
  • ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸ், ஹோமோ ஹாபிலிஸ் அல்லது புகழ்பெற்ற 'லூசி' (ஆஸ்ட்ராலோபிதேகஸ் அஃபாரென்சிஸ்) போன்ற ஆப்பிரிக்காவின் பழமையான ஹோமினின் வழித்தோன்றல் என்று இரண்டாவது கோட்பாடு தெரிவிக்கிறது.
  • அந்த இனத்தவர்கள் உயரத்திலும் மிகக் குறைந்தவர்கள் மற்றும் ஹோமோ எரெக்டஸ் இனத்திற்கு முன்பே வாழ்ந்தவர்கள் ஆவர்.
  • இந்தப் புதிய ஆய்வானது மூன்று படிமங்கள் ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸை விட சற்று சிறிய தாடைகள் மற்றும் பற்களைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கின்றன.
  • புளோரஸ் ஹோமினின்களின் வரலாற்றின் முற்காலத்திலேயே அந்த இனத்தின் சிறிய உடல் அளவு உருவானது என்று இது அறிவுறுத்துகிறது.
  • இந்த ஹோமினின்கள் 1 முதல் 0.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய உடல் கொண்ட ஆசிய ஹோமோ எரெக்டஸ் இனத்திலிருந்து மிக அதிக அளவிலான உடல் வளர்ச்சிக் குன்றல் நிலையினை எதிர் கொண்டிருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்