இந்தோனேசியாவில் மத்திய புளோரஸின் சோவா படுகையின் மாட்டா மெங்கே என்ற இடத்தில் 700,000 ஆண்டுகள் மிகப் பழமையான மூன்று ஹோமினின் புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனுடன், அறிவியல் ஆய்வாளர்கள் அவற்றின் தோற்றத்தை விவரிக்க என்று இரண்டு கோட்பாடுகளை முன் வைத்துள்ளனர்.
ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸ் முற்கால ஆசிய ஹோமோ எரெக்டஸ் இனத்தின் உயரம் குன்றிய வழித் தோன்றல்கள் என்று முதலாவது கோட்பாடு குறிப்பிடுகிறது.
அழிந்து போன மனித இனமான ஹோமோ எரெக்டஸ் 100,000 முதல் 1.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம்.
ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸ், ஹோமோ ஹாபிலிஸ் அல்லது புகழ்பெற்ற 'லூசி' (ஆஸ்ட்ராலோபிதேகஸ் அஃபாரென்சிஸ்) போன்ற ஆப்பிரிக்காவின் பழமையான ஹோமினின் வழித்தோன்றல் என்று இரண்டாவது கோட்பாடு தெரிவிக்கிறது.
அந்த இனத்தவர்கள் உயரத்திலும் மிகக் குறைந்தவர்கள் மற்றும் ஹோமோ எரெக்டஸ் இனத்திற்கு முன்பே வாழ்ந்தவர்கள் ஆவர்.
இந்தப் புதிய ஆய்வானது மூன்று படிமங்கள் ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸை விட சற்று சிறிய தாடைகள் மற்றும் பற்களைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கின்றன.
புளோரஸ் ஹோமினின்களின் வரலாற்றின் முற்காலத்திலேயே அந்த இனத்தின் சிறிய உடல் அளவு உருவானது என்று இது அறிவுறுத்துகிறது.
இந்த ஹோமினின்கள் 1 முதல் 0.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய உடல் கொண்ட ஆசிய ஹோமோ எரெக்டஸ் இனத்திலிருந்து மிக அதிக அளவிலான உடல் வளர்ச்சிக் குன்றல் நிலையினை எதிர் கொண்டிருக்கலாம்.