TNPSC Thervupettagam
June 11 , 2018 2361 days 692 0

  • புகழ்பெற்ற பிரிட்டிஷ் பாகிஸ்தானிய எழுத்தாளரான கமிலா சம்ஷியின் (Kamila Shamsie) “ஹோம் பையர்” (Home Fire) எனும் புத்தகம் 2018-ஆம் ஆண்டிற்கான புனைக்கதைகளுக்கான பெண்கள் பரிசினை (Women's Prize for Fiction, 2018) வென்றுள்ளது.
  • மேலும் இப்புத்தகமானது கடந்த ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசிற்கும் பரிந்துரைக்கப்பட்டது.

  • இந்த நாவலானது 9/11 நிகழ்வுக்குப் பிந்தைய சகாப்தத்தின் விசுவாச மோதல்கள் (conflicting loyalties), காதல் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றைப் பற்றியதாகும்.
  • இந்தப் பரிசானது 1996-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள பெண்களால் எழுதப்படுகின்ற வேலைப்பாடுகளின் அணுகல்தன்மை (accessibility), சிறப்புத்துவம் (excellence), மற்றும் உண்மைத்துவத்தை (originality) அங்கீகரிக்கின்ற மற்றும் அதனைக் கொண்டாடுகின்ற ஓர் வருடாந்திர பிரிட்டிஷ் விருதே இப்பரிசாகும்.

கமிலா சம்ஷி

  • இவர் இலண்டனில் உள்ள இலக்கியத்திற்கான இராயல் சொசைட்டியில் (Royal Society of Literature) உறுப்பினராக உள்ளார்.
  • இவர் 2013-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சிறந்த இளைய பிரிட்டிஷ் நாவலாசிரியர் (Granta Best of Young British Novelist) என அறிவிக்கப்பட்டார்.
  • இவருடைய முந்தைய நாவலான 2014 ஆம் ஆண்டின் “God in Every Stone” நாவலானது பெய்லேஸ் பரிசிற்கும் (Baileys Prize), வரலாற்றுப் புனைக் கதைகளுக்கான வால்டர் ஸ்காட் பரிசிற்கும் (Walter Scott Prize for Historical Fiction), தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசிற்கும் (DSC Prize for South Asian Literature) பரிந்துரைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்