அரசாங்கத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் V. ஆனந்த நாகேஸ்வரன் தயாரித்துள்ள "இந்தியப் பொருளாதாரம் – ஒரு மறுமதிப்பாய்வு" என்ற 74 பக்க ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றிற்குப் பிறகு நான்காவது ஆண்டாக, நாட்டின் பொருளாதாரம் 7% அல்லது அதற்கு மேல் வளர்ச்சி அடைய உள்ளது.
உலகப் பொருளாதாரம் ஆனது 4% வளர்ச்சி அடையும் சமயத்தில் இந்தியா 8-9% வளர்ச்சியினை அடையும்.
ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 51 கோடி வங்கிக் கணக்குகளில் தற்போது மொத்தம் 2.1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத் தொகை வைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 55 சதவீதத்திற்கும் அதிகமானவை பெண்களின் வங்கிக் கணக்குகள் ஆகும்.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், குடும்ப நிதிச் சொத்துக்கள் மதிப்பு ஆனது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 86.2% ஆகவும், கடன் இருப்புகள் ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33.4% ஆகவும் இருந்தது.
மேலும், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்த எண்கள் முறையே 103.1% மற்றும் 37.6% ஆக இருந்தது.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52.8% ஆக இருந்த குடும்பங்களின் நிகர நிதிச் சொத்துக்கள் ஆனது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 65.5% ஆக உயர்ந்துள்ளது.
2017-18 ஆம் ஆண்டில் 23.3 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர் வள பங்கேற்பு விகிதம் ஆனது, 2022-23 ஆம் ஆண்டில் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.