தமிழக முதல்வர் அவர்கள் அரங்க. இராமலிங்கம், K.N. கோதண்டம், மா. மருதாச்சலம் என்கிற சூர்யகாந்தன், மணி அர்ஜுனன், அர. திருவிடம், க.பூரணச்சந்திரன், G. மாணிக்க வாசகன், S. சண்முகசுந்தரம், S. நடராசன் என்கிற இலக்கியா நடராசன் ஆகிய ஒன்பது தமிழறிஞர்களுக்கு ‘இலக்கிய மாமணி’ விருதுகளை வழங்கினார்.
இந்த விருது 5 லட்சம் பரிசுத் தொகை, தங்கப் பதக்கம் மற்றும் ஒரு பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தமிழறிஞர் மு.வரதராசன் அவர்களின் சிலையையும் முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தமிழறிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான அண்ணல் தங்கோவின் சிலை, செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த சாதி ஒழிப்புப் போராளி இரட்டைமலை சீனிவாசனின் அவர்களின் சிலை ஆகியவையும் திறந்து வைக்கப் பட்டன.