TNPSC Thervupettagam

‘ஓர் அறிவியலாளர், ஒரு தயாரிப்பு’ திட்டம்

July 19 , 2024 3 days 68 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையானது அதன் ‘ஓர் அறிவியலாளர்-ஒரு தயாரிப்பு’ என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையில் ஆராய்ச்சியை நன்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ICAR நிறுவனத்தின் கீழ் உள்ள அனைத்து 5,521 அறிவியலாளர்களுக்கும் ஒரு தயாரிப்பு, ஒரு தொழில்நுட்பம், ஒரு மாதிரி, ஒரு கருத்தாக்கம் அல்லது ஒரு சரியான ஆய்வு முடிவைக் கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும், அறிவியலாளர் அல்லது அறிவியலாளர்கள் குழு ஒரு தயாரிப்பை அடையாளம் காண வேண்டும், அதன் பிறகு ICAR நிறுவனமானது அறிவியலாளர்கள் அல்லது குழுவின் படைப்பினை ஆய்வு செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்