இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையானது அதன் ‘ஓர் அறிவியலாளர்-ஒரு தயாரிப்பு’ என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புத் துறையில் ஆராய்ச்சியை நன்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ICAR நிறுவனத்தின் கீழ் உள்ள அனைத்து 5,521 அறிவியலாளர்களுக்கும் ஒரு தயாரிப்பு, ஒரு தொழில்நுட்பம், ஒரு மாதிரி, ஒரு கருத்தாக்கம் அல்லது ஒரு சரியான ஆய்வு முடிவைக் கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும், அறிவியலாளர் அல்லது அறிவியலாளர்கள் குழு ஒரு தயாரிப்பை அடையாளம் காண வேண்டும், அதன் பிறகு ICAR நிறுவனமானது அறிவியலாளர்கள் அல்லது குழுவின் படைப்பினை ஆய்வு செய்யும்.