TNPSC Thervupettagam

‘கவனத்தில் கொள்ள வேண்டிய நேரம்’ என்னும் அறிக்கை

January 25 , 2020 1674 days 674 0
  • ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் நிறுவனமானது “கவனத்தில் கொள்ள வேண்டிய நேரம்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது உலகளாவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வறுமையை ஒழிப்பது ஆகியவற்றின் மீது  கவனம் செலுத்துகின்றது.
  • பாலின ஏற்றத்தாழ்வு நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில், உலகில் உள்ள 2,153 செல்வந்தர்கள் அனைவரும் இணைந்து உலக மக்கள் தொகையின் 60 சதவீத மக்கள் வைத்திருப்பதை விட (4.6 பில்லியன் மக்கள்) அதிகமான செல்வத்தைக் கொண்டுள்ளனர்.
  • உலகின் பணக்காரர்களில் 1% பேர் 6.9 பில்லியன் மக்களை விட இரண்டு மடங்கு அதிகமான செல்வத்தைக் கொண்டுள்ளனர்.
  • இந்த அறிக்கையின்படி, ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் உயர் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு வருடத்தில் பெறும் சம்பளத்தைப் போல் வீட்டுவேலை பணிபுரியும் ஒரு பெண் பணியாளர் பெறுவதற்கு 22,277 ஆண்டுகள் ஆகும்.
  • 2018-19 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த நிதிநிலை அறிக்கையை விட, 63 இந்திய செல்வந்தர்களின் மொத்த செல்வம் அதிகமாக உள்ளது என்ற ஒப்பீட்டையும் இந்த அறிக்கையானது வெளிப்படுத்தி உள்ளது.
  • நாட்டின் அடித்தட்டு மக்கள் தொகையில் 70 சதவீதத்தினரைக் கொண்டுள்ள 953 மில்லியன் மக்கள் வைத்திருக்கும் செல்வத்தை விட நான்கு மடங்கு அதிகமாக இந்தியாவின் பணக்காரர்களில் 1% பேர் வைத்திருக்கும் செல்வமானது உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்