TNPSC Thervupettagam

‘காசநோய் இல்லாத தமிழ்நாடு’ பிரச்சாரம்

December 11 , 2024 12 days 109 0
  • தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி, “காசநோய் இல்லாத தமிழ்நாடு” என்ற 100 நாட்கள் பிரச்சாரத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • காசநோய் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தை சென்னை மேயர் பிரியா அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இந்தப் பிரச்சாரம் ஆனது, பொதுமக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழிப்பதற்கு மாநில அரசு இலக்கு வைத்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள், 2,88,331 பேர் காசநோய் பாதிப்பு உள்ளதா என்று பரிசோதிக்கப் பட்டுள்ள நிலைமையில் இதில் 7,968 பேர் பொது சுகாதார மையங்களிலும், 4,857 பேர் தனியார் மருத்துவ மையங்களிலும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • கண்டறியப்பட்ட காசநோயாளிகளின் வீடுகளின் மூலம் ஏற்பட்ட 8,735 தொடர்புகளில், 5,767 பேருக்கு நோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்