TNPSC Thervupettagam

‘குறவன்’ என்ற சொல் குறித்த பரிந்துரை

October 8 , 2024 46 days 177 0
  • கலாச்சார விழாக்களில் ‘குறவன்/குறத்தி ஆட்டம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தச் செய்வதற்கு எதிராக தமிழ்நாடு மாநிலத்தின் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் (SC & ST) ஆணையம் ஓர் பரிந்துரை அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
  • ‘குற’ என்பதை முன்னொட்டு அல்லது பின்னொட்டாகப் பயன்படுத்துவதையும், ‘குறவன்/குறத்தி ஆட்டம்’, என்ற சொல் பழங்குடியினர் சமூகங்களை அவமரியாதை செய்யப் பயன்படுத்தப்படுவதையும் எதிர்க்கும் விதமாக ஆணையம் பரிந்துரைத்து உள்ளது.
  • ‘குறவன்' என்ற பிரிவு தமிழ்நாட்டில் உள்ள பட்டியலிடப்பட்ட சாதியினரின் ஒரு பகுதியினர் ஆவர் என்பதோடு மேலும் 'குறவர்' மற்றும் 'மலைக்குறவர்' என்ற பிரிவு பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் ஆவர்.
  • ‘குறவன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் பாடல்களையும் தடை செய்ய தமிழக அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்