ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது (UNGA), அனைவருக்கும் கல்வி என்ற ஒரு உரிமையை உறுதிப்படுத்துகின்ற வகையிலான 'ஜனநாயகத்திற்கான கல்வி' என்ற தலைப்பிலான ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு இந்திய அரசு இணை ஆதரவு வழங்கியது.
"அனைவருக்கும் கல்வி" என்பது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கிறது என்பதை இத்தீர்மானம் அங்கீகரிக்கிறது.
ஜனநாயகத்திற்கான கல்வி என்ற இந்தத் தீர்மானத்தினை உறுப்பினர் நாடுகள் தங்களது கல்வித் தரநிலைகளுடன் ஒருங்கிணைப்பதற்கு வேண்டி இந்தத் தீர்மானம் ஊக்குவிக்கிறது.