தோழி என்ற திட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் (போக்ஸோ வழக்குகள்) பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க 70 பெண் காவலர்களை சென்னை நகர காவல்துறை நியமித்துள்ளது.
சென்னையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 35 உள்ளன. அவற்றின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தோழி திட்டத்திற்கு இரண்டு பெண் காவலர்கள் நியமிக்கப் படுவார்கள்.
பெண் காவலர்கள் போக்ஸோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர்கள் கண்காணிப்பார்கள்.
பாதுகாப்பின் அடையாளமாக நிர்பயா சின்னத்துடன் பதிக்கப்பட்ட இளஞ்சிவப்புப் புடவைகள் பெண் காவலர்களுக்கு வழங்கப்படும்.