TNPSC Thervupettagam

‘நெருப்பு வளையம்’ - சூரிய கிரகணம்

October 19 , 2023 404 days 321 0
  • புவியின் மேற்கு அரைக்கோளத்தில் ஒரு அரிய "நெருப்பு வளைய" சூரியக் கிரகண நிகழ்வு பதிவானது.
  • நிலவானது மிகவும் தொலைவில் இருப்பதால், அது சூரியனை முழுவதுமாக மறைக்க இயலாததால் "நெருப்பு வளையம்" போன்ற அமைப்பினை இந்த கிரகணம் உருவாக்குகிறது.
  • நிலவானது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் செல்லும் பயணத்தில், அது நமது கிரகத்தில் இருந்து அதன் சேய்மைப் புள்ளியில் அல்லது அதற்கு அருகில் இருக்கும் நேரத்தில் ஒரு வளைய சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
  • இது முழு சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், சூரியனின் முகத்தை முழுமையாக மறைக்காது.
  • மாறாக, சந்திரனின் இருண்ட பகுதியைச் சுற்றி சூரியனின் வெளிப்புற விளிம்பினைக்  காட்டும் வகையிலான ஒரு வளையம் போன்ற தோற்றத்தினை உருவாக்குகிறது.
  • முழு கிரகணம் ஆனது அமெரிக்காவில் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
  • அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நிகழ உள்ள முழு கிரகணத்திற்குப் பிறகு, 2044 ஆம் ஆண்டு வரை மற்றொரு கிரகணம் நிகழாது.
  • அடுத்த வளைய கிரகணம் 2046 ஆம் ஆண்டில் நிகழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்