TNPSC Thervupettagam

‘பால் விவாஹ் முக்த் பாரத்’ பிரச்சாரம்

December 4 , 2024 28 days 197 0
  • மத்திய அரசானது, "பால் விவாஹ் முக்த் பாரத்" என்ற தேசிய அளவிலான ஒரு முக்கிய பிரச்சாரத்தினை துவக்கியுள்ளது.
  • குழந்தைத் திருமணத்திற்கு எதிரான இந்தப் பிரச்சாரம் ஆனது மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான், திரிபுரா, அசாம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் கவனம் செலுத்தும்.
  • இதற்காக குழந்தைத் திருமணம் அற்ற பாரதம் எனும் இணைய தளமானது தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த இயங்கலை வழி தளமானது குழந்தை திருமணச் சம்பவங்கள் குறித்து தகவல் அளிக்கவும், புகார்களைப் பதிவு செய்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகள் (CMPO) பற்றிய பல தகவல்களை அணுகுவதற்கும் குடி மக்களுக்கு உதவுகிறது.
  • குடிமக்களுக்கு நன்கு அதிகாரம் அளிப்பதிலும், 2006 ஆம் ஆண்டு குழந்தை திருமணத் தடைச் சட்டத்தினை அமல்படுத்துவதிலும் இந்த இணைய தளம் ஒரு குறிப்பிடத்தக்க படி நிலையாகும்.
  • 2029 ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையை சுமார் 5 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
  • 2006 ஆம் ஆண்டில் 47.4% ஆக இருந்த குழந்தை திருமண விகிதம் ஆனது 2019-21 ஆம் ஆண்டில் 23.3% ஆக குறைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்