TNPSC Thervupettagam

‘புதுமைப் பெண்’ திட்டத்தின் இரண்டாம் கட்டம்

February 12 , 2023 526 days 452 0
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்திற்கு 'புதுமைப் பெண்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது சமூக நலத்துறை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையால் செயல் படுத்தப் படுகிறது.
  • இந்தத் திட்டமானது, அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 மதிப்பிலான நிதியுதவி வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தினை முதல்வர் அவர்கள் செப்டம்பர் மாதத்தில் தொடங்கி வைத்த நிலையில், இதன் மூலம் 1.16 லட்சம் மாணவர்கள் பயனடைந்து உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்