மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்திற்கு 'புதுமைப் பெண்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது சமூக நலத்துறை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையால் செயல் படுத்தப் படுகிறது.
இந்தத் திட்டமானது, அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 மதிப்பிலான நிதியுதவி வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தினை முதல்வர் அவர்கள் செப்டம்பர் மாதத்தில் தொடங்கி வைத்த நிலையில், இதன் மூலம் 1.16 லட்சம் மாணவர்கள் பயனடைந்து உள்ளனர்.