2025-26 ஆம் ஆண்டு வரையில் பெண்கள் பாதுகாப்பிற்கான அதன் மிகவும் முதன்மை திட்டத்தைத் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய பதிவின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 4,45,256 வழக்குகள் -சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 51 முதல் தகவல் அறிக்கைகள் - பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 4,28,278 ஆகவும், 2020 ஆம் ஆண்டில் 3,71,503 ஆகவும் இருந்தது.
2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டு காலங்களில் இந்தியாவில் 13.13 லட்சத்திற்கும் அதிகமான இளம் பெண்கள் மற்றும் பெண்கள் காணாமல் போனதாக பதிவாகியுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பதிவாகியுள்ளது.