TNPSC Thervupettagam

‘பெயர் மற்றும் அவமானம்’ குறித்த அறிவிப்புகளை நீக்க நீதிமன்ற உத்தரவு

March 12 , 2020 1630 days 500 0
  • சர்ச்சைக்குரிய ‘பெயர் மற்றும் அவமானம்’ குறித்த அறிவிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் லக்னோ நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
  • இந்த அறிவிப்புகளில் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
  • குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் வகையில் லக்னோ நகர் முழுவதும் காவல்துறையினர் பல அறிவிப்புகளை வைத்துள்ளனர்.
  • அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து இந்தச் செயல் குறித்து விசாரித்தது.
  • இது இந்திய அரசியலமைப்பின் 21வது சரத்தையும் மீறுவதாக அமைந்துள்ளது.
  • மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973ன் படி, ஒரு நபரின் தனிப்பட்ட பதிவுகளை பொதுவெளியில் காண்பிப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் காவல்துறை அல்லது நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்கப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்