உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானாகச் செயலிழக்கும் "விபவ்" என அழைக்கப் படும் 600 பீரங்கி எதிர்ப்பு கண்ணி வெடிகள் இராணுவத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.
அவை எதிரி நாட்டின் அனைத்து வகையான கவச வாகனங்களின் இயக்கத்தினையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளன.
அவை இயந்திர நேரங்குறிக் கருவியைக் (டைமர்களை) கொண்டிருப்பதால், 120 நாட்களுக்குப் பிறகு, தானாகவே செயலிழக்கும்.
முந்தைய ரக கண்ணி வெடிகளில் இந்தச் செயலிழக்கும் அம்சங்கள் இல்லை.