TNPSC Thervupettagam

‘ஸ்டார்ட்அப் தமிழா’ பொழுதுபோக்குக் காட்சி

September 15 , 2023 309 days 263 0
  • தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கத் திட்டம் (StartupTN) ஆனது, 'ஸ்டார்ட்அப் தமிழா' எனும் புத்தொழில் நிறுவனம் சார்ந்த தமிழ் பொழுதுபோக்குக் காட்சியை அறிமுகப் படுத்த உள்ளது.
  • இது மாநில இளைஞர்களிடையே தொழில் முனைவோர் கலாச்சாரத்தை உருவாக்கச் செய்வதையும், ஒரு மாபெரும் தளத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதுமைகளை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக அளவிலும், தேசிய அளவிலும், ஷார்க் டேங்க் போன்ற நிகழ்ச்சிகள் புத்தொழில் நிறுவனங்களின் சூழலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்தக் கருத்தாக்கத்தினை ஒரு பிரபலமான கலாச்சாரமாகக் கொண்டு வந்துள்ளன.
  • ஒரு பொழுதுபோக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படும் ஸ்டார்ட்அப் தமிழா, மாநிலத்தில் புத்தொழில் நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களை நடப்பில் உள்ள முதலீட்டாளர்களுடன் இணைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்