TNPSC Thervupettagam

‘10,000 மரபணு வகையிடல் திட்டம்

March 4 , 2024 137 days 227 0
  • உயிரித் தொழில்நுட்பத் துறை (DBT) ஆனது, ‘10,000 மரபணுத் தொகையாக்கல்’ என்ற திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • இது இந்தியா முழுவதற்குமான முழு-மரபணு படமிடலின் குறிப்பு பெறுதலுக்கான தரவுத் தளத்தை உருவாக்கும் முயற்சியாகும்.
  • இந்தியா முதன்முதலில் 2006 ஆம் ஆண்டில் முழுமையான மனித மரபணுக்களைத் தொகைப் படுத்தியது.
  • இந்திய மக்கள்தொகையின் பன்முகத்தன்மையின் தரவுத் தளத்தை உருவாக்குவது என்பது இந்தியாவின் மக்கள்தொகை குழுவில் உள்ள தனித்துவமான மரபணு மாறுபாடுகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், மருந்துகள் மற்றும் சிகிச்சைகளைத் தனிப்பயனாக்க அதைப் பயன்படுத்துவதற்கும் ஒரு முக்கிய படிநிலையாகக் கருதப் படுகிறது.
  • 1.3 பில்லியன் இந்திய மக்கள்தொகை என்பது 4,600க்கும் மேற்பட்ட மக்கள்தொகை குழுக்களைக் கொண்டுள்ளது என்பதோடு அவற்றுள் பல உள் இன மரபுத் திருமண முறை கொண்டவையாகும்.
  • ஐக்கியப் பேரரசு, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை குறைந்தபட்சம் 1,00,000 மரபணுக்களை தொகைப்படுத்துவதற்கான திட்டங்களைக் கொண்ட நாடுகளுள் சிலவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்