TNPSC Thervupettagam

‘An Eye On Methane – Invisible But Not Unseen’ அறிக்கை

November 22 , 2024 3 days 53 0
  • இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் (UNEP) சர்வதேச மீத்தேன் உமிழ்வு ஆய்வகத்தினால் (IMEO) வெளியிடப்பட்டது.
  • அதிகளவிலான மீத்தேன் உமிழ்வுகளை அடையாளம் காணும் ஒரு உயர் தொழில்நுட்ப அமைப்பு ஆனது கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு 1,200 அறிவிப்புகளை வழங்கியுள்ளது.
  • ஆனால் ஒரு சதவீத அறிவிப்புகளுக்கு மட்டுமே பதிலளிக்கப்பட்டது.
  • வளிமண்டல மீத்தேன் ஆனது, கார்பன் டை ஆக்சைடு (CO2) வாயுவிற்கு அடுத்தபடியாக பல்வேறு மனிதச் செயல்பாடுகள் காரணமாக ஏற்படும் புவி வெப்பமடைதலுக்கான இரண்டாவது பெரிய காரணியாகும்.
  • இது CO2 வாயுவினை விட 80 மடங்கு சக்தி வாய்ந்தது.
  • புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பிற்குள் கட்டுப்படுத்தச் செய்வதற்கான செலவு குறைந்த பாதைகளை அடைவதற்கு, 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய மீத்தேன் வெளியேற்றம் 40-45 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்