சுமார் 100க்கும் மேற்பட்ட இந்தியக் குடியேறிகளை ஏற்றி வந்த அமெரிக்க இராணுவ விமானம் ஆனது அமிர்தசரஸில் தரையிறங்கியது என்பதோடு இது அதிபர் டிரம்ப் ஆட்சியின் கீழ் நடைபெற்ற முதல் வெகுஜன நாடுகடத்தலைக் குறிக்கிறது.
அவர்களில் மிகப் பெரும்பாலோர் "donkey route" எனப்படும் ஆபத்தானப் பாதையில் பயணித்தனர்.
இது மனிதக் கடத்தல் அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்ற, பல நாடுகளை உள் அடக்கிய மற்றும் தீவிர ஆபத்துகளை ஏற்படுத்தச் செய்கின்ற ஒரு சட்டவிரோதப் புலம் பெயர்வுப் பாதையாகும்.
"donkey route" என்பது வேலைவாய்ப்புகள் மற்றும் சிறந்த ஒரு வாழ்க்கைத் தரத்திற்காக அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளை சென்றடைவதற்காக புலம் பெயர்ந்தோர் மேற்கொள்ளும் ஆபத்தானப் பயணத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும்.
இது ஒரு கடினமான, திட்டமிடப்படாத பயணத்தைக் குறிக்கும் பஞ்சாபி மொழியின் பழமொழியின் பெயரால் பெயரிடப்பட்டது.