‘Forever chemicals’ – இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்
April 13 , 2024 225 days 280 0
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சமீபத்திய ஆய்வானது, ' ‘forever chemicals' (அழியாத வேதிப் பொருட்கள்) என்றழைக்கபடும் ப்ரீ மற்றும் பாலி ஃப்ளூரோஅல்கைல் பொருட்கள் (PFAS) பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றில் மிகப் பரவலாக காணப்படுவதை நன்கு வெளிப்படுத்தி யுள்ளது.
ப்ரீ மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருட்கள் (PFAS) என்பது ஒட்டாதத் தன்மை உடைய சமைக்கும் கலங்கள், மெத்தை விரிப்பான்கள், உணவுப் பொதிகள், தண்ணீர் அல்லது கறை படாமல் தடுக்கும் வண்ணப்பூச்சுகள் மற்றும் தொழில்துறைப் பொருட்கள் போன்ற அன்றாடப் பயன்பாட்டு தயாரிப்புகளில் காணப்படும் செயற்கை இரசாயனங்களின் பரந்த பிரிவு வகைகளில் ஒன்றாகும்.
இந்த இரசாயனங்கள் சுற்றுச்சூழலில் எளிதில் சிதைவதில்லை.
அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (EPA) பாதுகாப்புத் தர நிலைகளுடன் ஒப்பிடும் போது சென்னை மாநகரத்தில் உள்ள நீர்நிலைகளில் 'forever chemicals' என்று அழைக்கப் படும் இந்த ப்ரீ மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருட்கள் (PFAS) செறிவு சுமார் 19,400 மடங்கு அதிகமாக உள்ளது.